முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சிகாகோ நகரிலிருந்து சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 141 பயணிகளும், 16 பணியாளர்களும் இருந்தனர். திடீரென்று ரெயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது 

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்த ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அந்த ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். 

மூன்று பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த உறுதியாக தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து