முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது: தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      விளையாட்டு
Murmu 2022-11-30

Source: provided

புதுடெல்லி : டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

சிறந்த வீரர்களுக்கு...

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

சரத் கமலுக்கு.... 

அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

25 பேருக்கு...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து