முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் உச்சவரம்பு மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்: அதிபர் ஜோ பைடன் கருத்து

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
Joe-Biden 2023 03 28

வாஷிங்டன்,  கடன் உச்சவரம்பை உயர்த்தும் திருத்த மசோதா மக்களுக்கான நல்ல செய்தி என்றும், செனட் சபையில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், அரசின் நிதி கருவூலகம் முற்றிலுமாக தீரும் நிலையில் உள்ளதாகவும் ஊடகங்கள் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன. 

இந்த நிலையில், அரசின் சுமையை குறைக்க கடன் உச்சவரம்பை உயர்த்த வழிவகுக்கும் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் குடியரசு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செனட் சபை (மக்களைவை)-க்கு இந்த மசோதா இன்று  கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியதை அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, 

இது அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நல்ல செய்தி. ஆனால், செனட் சபை இதனை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேறும்பட்சத்தில் வரும் 5-ம் தேதி மசோதாவை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட முடியும் என்று தெரிவித்தார். 

கடன் உச்சவரம்பை உயர்த்தும் மசோதா சட்டமானால் நிதி நெருக்கடியில் உள்ள அமெரிக்க அரசின் சுமைகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் அடிப்படை திட்டங்களை அரசு விரிவுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து