எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது;
ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிர் இழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த துக்க நேரத்தில் விபத்தில் இறந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா, தைவான், நேபாளம், ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து குறித்து செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கடினமான இத்தருணத்தில் இந்திய மக்களுடன் துணை நிற்பதாக கனடா பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிராத்தனை செய்கிறேன் என தைவான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025