எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
524 ரன்கள் குவிப்பு...
பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
முதல் இரட்டை சதம்...
இந்நிலையில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் இரட்டை சதத்தை ஒல்லி போப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் கடந்த 41 வருடத்தில் அதிவேக இரட்டை சதமாக இது பார்க்கப்படுகிறது. இவர் 207 பந்தில் 205 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அணிக்கு எதிராக போத்தம் இரட்டை சதம் விளாசினார். இவர் 220 பந்தில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்சர் மூலம் இரட்டை சதத்தை பதிவு செய்த ஒல்லி போப்புக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025