எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் பெற்ற ஒலிம்பிக் விருது உள்ளிட்ட சர்வதேச விருதுகளை கங்கையில் வீசி எறிவதாக அறிவித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கத் கோரிக்கையை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். அப்போது அரசுக்கு அவர்கள் ஐந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில்தான் மல்யுத்த வீராங்கனைகள் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். பிரிஜ் பூஷன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சரிடம் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் நடந்த முதல் மேல்மட்ட சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திவரும் சம்பவமாக மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அமைந்துள்ளது. இப்போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்து வருவதாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆளும் பாஜக எம்பியாக இருப்பதாலும் இப்போராட்டம் விவாதத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் நேற்று மாலை 6 மணியளவில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர்.
பல ஆண்டு கடின உழைப்புக்கு பின்வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்கவேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 21 hours ago |
-
இந்திய அணி வெற்றி பெறுமா? - பரபரப்பான கட்டத்தில் 'பாக்சிங் டே' டெஸ்ட்
29 Dec 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?
-
உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன்
29 Dec 2024புதுடில்லி : அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி
-
பா.ம.க. பொறுப்பில் இருந்து முகுந்தன் திடீர் விலகல்
29 Dec 2024சென்னை : பா.ம.க. ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை : நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
29 Dec 2024சென்னை : நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை என்றும், “இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு என்றும், அவருக
-
ரோகித் சர்மா குறித்து மைக் ஹசி
29 Dec 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
-
பல்கலை. மாணவி வழக்கு: தேசிய மகளிர் ஆணையம் இன்று முதல் விசாரணை
29 Dec 2024சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
-
2-ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ.3,660 கோடியில் ஓட்டுநர் இல்லாத 70 ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து
29 Dec 2024சென்னை : 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3 மற்றும் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாரத் எர்த் மூவர்ஸ
-
'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
29 Dec 2024சென்னை : 'யார் அந்த சார்?' என்ற வாசகத்துடன் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட புதிய கண்ணாடி நடைபாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
29 Dec 2024குமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி நடைபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
29 Dec 2024தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
-
காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம்: சீமானுக்கு தி.மு.க. கண்டனம்
29 Dec 2024சென்னை : காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம் செய்த சீமானுக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2024
29 Dec 2024 -
16 மணி நேர மீட்பு பணி வீண்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு
29 Dec 2024போபால் : குஜராத் மாநிலம் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 16 மணி நேர மீட்பு போராட்டம் வீணானது.
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
29 Dec 2024ஸ்ரீஹரிகோட்டா : பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் நேற்று அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.
-
தரையிறங்கும் போது சுவரில் மோதி விபத்து: தென் கொரியவிமானத்தில் இருந்த 179 பேர் கருகி பலி : மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
29 Dec 2024சியோல் : தரையிறங்கும் போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் தென் கொரிய விமானத்தில் இருந்த 179 பேரும் உடல் கருகி பலியானார்கள்.
-
வாட் வரி உயர்வு எதிரொலி: புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்
29 Dec 2024புதுச்சேரி : வாட் வரி உயர்வு காரணமாக புதுச்சேரியில் ஜன.1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ. 2 உயர்வு அமலாகிறது.
-
பிஜி நாட்டில் தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவக்கம் : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் தகவல்
29 Dec 2024புதுடெல்லி : தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
முதல் முறையாக அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்திய இஸ்ரேல்
29 Dec 2024இஸ்ரேல் : ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசிய நிலையில், அதை தடுக்க அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை த
-
பாங்காங் ஏரி கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை : இந்திய ராணுவம் திறப்பு
29 Dec 2024லடாக் : கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபத
-
தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
29 Dec 2024தூத்துக்குடி : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எச்1-பி விசாவுக்கு திடீர் டிரம்ப் வரவேற்பு
29 Dec 2024அமெரிக்கா : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
-
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்: இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலம்
29 Dec 2024சென்னை : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி சார்பில் சென்னையில் மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடை
-
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Dec 2024சென்னை : உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள
-
உட்கட்சி விவகாரங்களை விவாதிக்க வேண்டியதில்லை : ராமதாசுடன் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி
29 Dec 2024சென்னை : கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி.
-
34 வது நாளை கடந்த உண்ணாவிரதம்: பஞ்சாப் விவசாய சங்க தலைவரின் உடல் நிலை மேலும் மோசமானது
29 Dec 2024சண்டிகர் : பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுடன (டிச. 29) 34வது நாளை எட்டியுள்ளது.