முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Ramachandran 2023 06 10

Source: provided

நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஹோட்டல் தங்கும் விடுதி  அமுதகம் உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது

நாட்டின் அன்னிய செலாவணி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலாத் பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. 

கொரோனா நோய் தொற்றினால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சீரிய முயற்சிகளால் 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆக உயர்ந்து இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை  3 மாத காலத்தில் மட்டும் 2,67,773 ஆக உயர்ந்துள்ளது. 

இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆக உயர்ந்து, இந்த ஆண்டு 2023 ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் 6,64,90,154 என உயர்ந்துள்ளதோடு, விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகின்றது. இவற்றில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 845 அறைகள் பொதுமக்களுக்கு தங்கும் வசதி சேவையை வழங்கி வருகின்றன.  ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப்பகுதிகளில் குறைவான கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தங்கும் விடுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகைகள் அளிக்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை கொடைக்கானல், உதகமண்டலம், பைக்காரா, ஏற்காடு, முட்டுக்காடு, முதலியார் குப்பம், பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.

மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும்; வகையில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான பல்வேறு சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வழிப்பாட்டுதளங்களை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து