முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-09-19

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க .ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.3,000/-லிருந்து ரூ.4,000/-மாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-மாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக, ஓய்வு பெற்ற 5 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் 5 பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்திற்கான காசோலைகளை  வழங்கி, தொடங்கி வைத்தார்.   

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பில், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ. 3000/- ஆகும். 

இவ்வரசின் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1500/- குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500/-லிருந்து ரூ.2000/-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதல்வர், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4,000/- மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2,000/- ஆகியவற்றிற்கான காசோலைகளை ஓய்வுபெற்ற  திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப  ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து