எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை எக்காலத்திலும் கர்நாடகா ஏற்றதில்லை என்றும், தண்ணீர் வைத்துக்கொண்டே தர மறுக்கிறார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் காவிரி தண்ணீரை கர்நாடகம் முறையாக திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்கள். கோரிக்கை மனுவும் அளித்தனர். ஆனால் மத்திய அமைச்சர் தமிழகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவில் சொல்வதாக தெரிவித்தார். காவிரி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது.
இந்தநிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்த கோரிக்கையையும், இதுவரை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதில்லை.காவிரி விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறினோம், அதை அவர்கள் மறுத்தார்கள். நாம் பெற்ற அனைத்து உரிமையும் சுப்ரீம் கோர்ட் மூலமே பெறப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் முறையிட்டோம். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோரட்தான் ஒரே தீர்வு. கர்நாடகம் தண்ணீரை வைத்துக்கொண்டு திறந்து விட மறுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025