முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ஈரான் அரசு அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      உலகம்
Iran-women-2023-09-21

டெக்ரான், விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை  விதிக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கூடிய மசோதாவை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் தகாத முறையில் உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். 

ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த மசோதா அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. 

இந்த ஹிஜாப் மசோதா 152-க்கு 34 என்ற பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் பெண் டிரைவர் அல்லது பயணிகள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. முறையற்ற ஹிஜாப் அணிந்ததற்காக போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமினி மரணம் தொடர்பாக எதிர்ப்புக்கள் வெடித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து