முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட வழக்கு: இயக்குனர் கவுதமன் அக்.10-ல் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      சினிமா      தமிழகம்
Gowthaman

அரியலூர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட வழக்கில் இயக்குனர் கவுதமன் அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 

இதைத் தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் குழுமூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட பல்வேறு அமைப்புகள் மீது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் கவுதமன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இந்த நிலையில், இயக்குனர் கவுதமன் வரும் அக்டோபர் 10-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து