முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் மதிப்பெண் பூஜ்ய விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

 புதுடெல்லி : நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த 20-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 

ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை எதிர்த்து ஏற்கனவே முதுநிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில், மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வுகள் வாரியம் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து