எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்பால் : மணிப்பூரில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள்.
இவர்கள் தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.
சுராசந்த்பூர் தான் மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும். இங்கு தான் கடந்த மே மாதம் 3-ம் தேதி வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இரண்டு சிறார்களும் கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு பழமொழி சொல்வது போல், ஒருவர் குற்றம் செய்து விட்டு தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்கு மரண தண்டனை உட்பட அதிகபட்ச தண்டனையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025