எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் முன்னாள் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கான ஆங்கில இணையதளம் ஒன்றில் இது தொடர்பாக அவர் எழுதிய பத்தி ஒன்றில், “நிர்வாகிகள் டி20 கிரிக்கெட்டை பெரிய அளவுக்கு ஆதரித்து ஒருநாள் கிரிக்கெட்டை காலி செய்து விட்டனர், இப்படி காலியாவதற்கு அனுமதித்த வீரர்களும் குற்றவாளிகளே” என தெரிவித்துள்ளார்.
ஆம், முன்பெல்லாம் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. ஷார்ஜாவில் சில வேளைகளில் ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை ஒருநாள் கிரிகெட்டும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் என்னும் கருத்தாக்கமே காணாமல் போய் விட்டது. ஐசிசி ஒரு கட்டத்தில் எதிர்காலப் பயணத்திட்டத்தில் முத்தரப்பு கிரிக்கெட்டைச் சேர்த்தாலும் பணபலமுள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே வெறும் இருதரப்பு ஒருநாள் தொடராகக் குறுக்கப்பட்டு அதுவும் அளவில் குறைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவர் அந்தப் பத்தியில் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது. இதனால் பணத்தைப் பெருக்க டி20 கிரிக்கெட்டை பெரிய அளவில் வாரியங்கள் வளர்த்து விடுகின்றன. கிரிக்கெட்டை நிதியளவில் பெரிய அளவில் டி20 உயர்த்தியது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை புறமொதுக்கி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டை இன்று உதிர்ந்து வாடிய பூவாக்கி விட்டது. அதாவது ஆட்டத்தின் அமைப்பாக்கத்தில் டி20க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விகிதாச்சார அளவுப்படி மேலதிகமானது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது உலகக்கோப்பையை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் போட்டியாக பெரிய அளவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஊதிவிட்டு வருகின்றனர்.
1996-ல் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற தொடர் ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது நான் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் நட்பு ரீதியாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான் இந்த வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கேட்டேன்: ஏன் இருநாடுகளுக்கும் இடையே பகை, நீங்கள் இரு அணி வீரர்களும் நன்றாகத்தானே பழகுகிறீர்கள் என்று கேட்டேன்.
அப்போது பதில் இவ்வாறு எனக்குக் கிடைத்தது, “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம், இருவரும் ஒரே உணவைத்தான் உண்கிறோம். ஆகவே மக்கள் நன்றாக ஒருவருடன் ஒருவர் பழகுகின்றனர். அரசியல்வாதிகள்தான் பகைமையை தக்க வைக்க முயற்சிக்கின்றனர்” என்றார் ஒரு வீரர். இது வருத்தத்திற்குரியது, ஆனால் உண்மையான கூற்று. இதற்குப் பிறகே உறவுகள் மேலும் மோசமடைந்துதான் போய்விட்டது.
நன்றாக ஆடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை ரசிகர்கள், வீரர்கள் என்று அனைவரும் விரும்பவே செய்வார்கள். முதலில் 60 ஓவர்களாக தொடங்கிய உலகக்கோப்பையில் 1975-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை மீறியும் வெஸ்ட் இண்டீஸ் அருமையாக ஜெயித்தது. அதன் பிறகே 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. இன்று டி20 கிரிக்கெட்டினால் மலர்ச்சியின்றி வாடிப்போயுள்ளது. டி20 பணமழை, ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வருவாய், வீரர்களுக்கு ஏகப்பட்ட பணம் என்று கொட்டிக் கொடுக்க ஒருநாள் கிரிக்கெட்டை சாவிலிருந்து மீட்க நிர்வாகிகள் தந்திரங்களில் ஈடுபட்டனர். பவர் ப்ளே, பவுண்டரிகளின் நீளத்தை குறைப்பது, பவுலர்களையும் பவுலிங்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதிமுறைகள், பேட்டிங் பிட்ச், இது கேப்டன்களின் கற்பனை வளத்தைப் பதிலீடு செய்து கேப்டன்களின் சிந்தனையையே கட்டுப்படுத்தத் தொடங்கியது.
பவர் ப்ளே என்பது இல்லாத காலத்தில் கேப்டன்களுக்கு பெரிய சவால், களவியூகம் அமைப்பதில் அவர்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. இப்போது ஆட்டத்தின் கண்டிஷன்கள் கேப்டன்களைக் கட்டுப்படுத்தி அவர்களை வெற்றாக்கி விட்டது. ஒரு அணியில் 2 பவுலர்கள் 10 ஓவர்கள் கட்டுப்பாடில்லாமல் அதிக ஓவர்கள் வீசலாம் என்று அனுமதிக்கலாம். இதன் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கேப்டன்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த முடியும், ஆட்டமும் சுவாரஸ்யமடையும்.
50 ஓவர் கிரிக்கெட்டை முன்னேற்ற நிறைய வழிகள் இன்னும் உள்ளன. சிந்தனாபூர்வமாக மாற்றங்களைக் கொண்டு வந்து ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஆனால் அவை தழுவப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் உதிர்ந்த மலராக வாடி வீழ்ந்து வருகின்றது. ஆனாலும் உலகக்கோப்பை என்பது இன்றும் பெரிய அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. ஆகவே 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் உயிர் இருப்பதை மெய்ப்பிக்கிறது. இவ்வாறு இயன் சாப்பல் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க பாடகி
25 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
25 Dec 2024சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் என்று தெரிவித்துள் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மெரினா உணவுத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு விற்பனை
25 Dec 2024சென்னை, மெரினா உணவுத்திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவு தயாரிப்புகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தகவல்களை திரட்டும் அதிகாரம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை: ஆம் ஆத்மிக்கு டெல்லி அரசு எதிர்ப்பு
25 Dec 2024புதுடெல்லி, ஆம் ஆத்மியின் நலதிட்ட அறிவிப்புக்கு எதிராக டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சித்துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவின் தேசிய பறவை அறிவிப்பு
25 Dec 2024வாஷிங்டன், அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'இசை முரசு' ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாள்: காலங்கள் கடந்து வாழ்வார் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, 'இசை முரசு' ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் காலங்கள் கடந்து வாழ்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
25 Dec 2024புதுடெல்லி, பொய் வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி செய்வதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது டெல்ல
-
4.4 ரிக்டர் அளவில் ஆப்கானில் நிலநடுக்கம்
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு
25 Dec 2024மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின்
-
தேசிய 46-வது மகளிர் கைப்பந்து போட்டி: சுழற்சி லீக்போட்டிக்கு தமிழ்நாடு அணி தகுதி
25 Dec 2024திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று
-
ஆலோசனைகளை வழங்கி இளம் வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
25 Dec 2024மெல்போர்ன்: இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பவில்லை - ரோகித் சர்மா
-
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று மெல்போர்னில் மோதல்
25 Dec 2024மெல்போர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர் சமனில்...