எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டுறவுத் துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, இராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டிடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில், விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விரைவாகவும், எளிதாகவும் சரியான எடையில், நியாயமான விலையில் விற்பனை செய்ய ஏதுவாக மின்னணு வர்த்தகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 6.93 கோடி ரூபாய் செலவில் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம் மற்றும் ஆய்வுக்கூடம், இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 5.63 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 மற்றும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரு கிடங்குகள் மற்றும் ஏலகளம்,
நகர்வாழ் அடித்தட்டு மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, சிந்தாதிரிப்பேட்டை நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2,306 சதுர அடி பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மறைமலைநகரில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 16,000 சதுர அடி பரப்பளவில் 3.52 கோடி ரூபாய் செலவில் சங்கத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு திருமண மண்டபம் என மொத்தம் 23.35 கோடி ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |