முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2039 வரை முன்பதிவான சபரிமலை படி பூஜை..!

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

சபரிமலை : சபரிமலையில் படி பூஜை 2039 வரையிலும் உதயாஸ்தமன பூஜை 2029 வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் பக்தி பூர்வமானதும் அதிக செலவும் உடையது படி பூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து தேங்காய் குத்துவிளக்கு வைத்து மலர்களால் அலங்கரித்து தந்திரி தலைமையில் ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். சபரிமலை உள்ளிட்ட 18 மலைகளின் மலை தேவதைகளை திருப்திப்படுத்த இந்த பூஜை செய்யப்படுகிறது.

இந்த பூஜைக்கு கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய். 2039 வரை முன்பதிவு முடிந்துள்ளது. நடைதிறந்தது காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடைபெறும் உதயாஸ்தமன பூஜையின் கட்டணம் 61,800 ரூபாய். இது 2029 வரை முன்பதிவு முடிந்துள்ளது. மற்றொரு முக்கிய பூஜையான சகஸ்ர கலச பூஜையின் கட்டணம் 91 ஆயிரத்து 250 ரூபாய். இது 2030 வரை முன்பதிவு முடிந்துள்ளது.

சபரிமலை சன்னிதானத்தின் நிர்வாக அலுவலகத்தில் இதற்கான பணம் செலுத்தி பூஜைகள் முன் பதிவு செய்யலாம். தற்போது முன்பதிவு செய்பவர்கள் பூஜையில் செய்யும் காலத்தில் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் கூடுதல் தொகையை மீண்டும் செலுத்த வேண்டும். படிபூஜை நேரத்தில் பக்தர்கள் படி ஏறுவதை தடை செய்ய வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் இந்த பூஜை கிடையாது. மகர விளக்கு முடிந்த பின், மாத பூஜை காலங்களிலும் படி பூஜை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து