எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் 2வது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கு நவ. 17-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவ. 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நவ. 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. 5 மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடியாகும். மிசோரமில் 77.04 சதவீதம், சத்தீஸ்கரில் 76.31 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 76.22 சதவீதம், ராஜஸ்தானில் 73.92 சதவீதம், தெலங்கானாவில் 70.60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் களமானது, பா.ஜ.க. - காங்கிரஸ் இடையிலான பலப்பரீட்சையாக கருதப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆளுங்கட்சியாக உள்ளன. தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி காணப்பட்டது. மிசோரமில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என பலமுனைப் போட்டி நிலவியது.
தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வர வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வும், சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆட்சியைத் தக்க வைக்கும். தென் மாநிலமான தெலங்கானாவில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும், மிசோரமில் தொங்கு பேரவை அமையக் கூடும் என்று வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன. இன்று வாக்கு எண்ணிக்கையையொட்டி, 4 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதமான நாளாக கருதப்படுவதாலும், அன்றைய தினம் பெருமளவில் மக்கள் தேவாலயங்களுக்குச் செல்வர் என்பதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேவாலயங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இக்கோரிக்கையை முன்வைத்து, மிசோரம் முழுவதும் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அங்கு வாக்கு எண்ணிக்கை தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி மிசோரம் மாநிலத்திலும் இன்று நடைபெறவிருந்த வாக்கு எண்ணிக்கை, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு நாளை (திங்கள்கிழமை - டிச. 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? - இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
13 Jan 2025கெய்ரோ : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
13 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
13 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக
-
கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்திற்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Jan 2025சென்னை: கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஓரிரு நாளில் இந்திய அணி அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது
13 Jan 2025மதுரை: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
பிரட்டனில் 166 மி. ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
13 Jan 2025லண்டன் : பிரிட்டனில் சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.