Idhayam Matrimony

அம்பேத்கர் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம் என மரியாதை செலுத்தி உள்ளார். 

சட்டமேதை அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிலையில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர். உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச் சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களை சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்.

அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம். எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து