முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : 'மிக்ஜம்' புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்தநிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இத்தகையசூழலில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் இன்று, நாளை (டிச. 7, 8) நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிச. 7, 8 தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் முறையே டிச. 14, 20 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து