எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை ஏற்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று (புதன்கிழமை) ஆஜரான வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் ஒரு முறையீடு செய்தார். சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளில் 190 பேர் உயிரிழந்த நிலையில், நான் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
அந்த வழக்கையே, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டார். இந்த முறையீட்டைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்து, முறையாக மனு தாக்கல் செய்தால், ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.