Idhayam Matrimony

செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்திறப்பு குறைப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Chembarambakkam 2023 06 20

Source: provided

சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 13ல் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து துவங்கியது.

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மி.கன அடியாகவும் உள்ளது. இந்த ஏரியில் நேற்று முன்தினம் 8,514 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 4,166 கன அடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவானது குறைக்கப்பட்டுள்ளது. 6000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது வினாடிக்கு 1,189 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னையில் மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால், இவையனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டன. இந்த நிலையில், ஆலந்தூர் அருகே தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதை உட்பட 13 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதன் வழியே போக்குவரத்து துவங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து