முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொட்டும் மழையில் காத்திருந்து சபரிமலையில் தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023-12-08

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். 

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ம் தேதி) முதல் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கனமழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தபோதிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபடி இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து