முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா பேரவை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
RBU 2023-12-09

Source: provided

மதுரை : மாநில அம்மா பேரவை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் அரிசி, சமையல் பொருட்கள், பெட்ஷீட், துண்டு உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை சென்னை அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அனுப்பி வைத்தார்.

அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,

மிக்ஜாம்  புயலில் மீட்பு பணியை அரசு சரியாக மேற்கொள்ளவில்லை.  ஒரு மழைக்கே 3 லட்சம் குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.   அடையாறு, கூவம், பள்ளிக்கரணை உள்ளிட்ட ஐந்து நீர் வழித்தடங்களில் தான் மழை நீரை கடத்த முடியும். ஆனால் அதற்குரிய இணைப்புகளை அரசு முறையாக செய்யவில்லை.  ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் மழை பெய்தது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் டிசம்பர் 3, 4-ம் தேதிகளில் மழை பாதிப்பிலிருந்து மக்களை காபற்றியிருக்கமுடியும்.  மக்களை காப்பதில் அரசு கோட்டை விட்டு விட்டது. 

மழைநீர் வடிகால் பணியை 90 சதவீதம்  முடித்து விட்டோம் என்று கூறினார்கள். ஆனால் 10 சதவீதம் கூட தி.மு.க. அரசு முடிக்கவில்லை.   மழை நீரை கடல் உள்வாங்காதால் பாதிப்பு ஏற்பட்டது என்று தி.மு.க. சொல்கிறது. மழை பெய்யும் போது புயல் கரைக்கும் போது கடலில் நீர் உள்வாங்காது. ஆனால் இதை சொல்லி நியாயப்படுத்துகிறார்கள்.   

எடப்பாடியார் ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப்பட்டது. 

சென்னையை சுற்றி 3000 ஏரிகள் உள்ளது. இது போன்ற காலங்களில் அதிகமாக மழை பொழியும் பொழுது ஒவ்வொரு நீர் வெளியேறி சென்னைக்குள் நீர் புகுந்து விடும். கடந்த எடப்பாடியார் ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இது போன்ற ஏரிகளை சீரமைக்கப்பட்டதால் அந்த நீர்கள் எல்லாம் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டன. தற்போது தி.மு.க அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டதால் சென்னை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

தானே புயல், நீலம் புயல், மடி புயல், வர்தா புயல், ஓக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் ஆகியவை அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக கையாளப்பட்டது.  குறிப்பாக கஜா புயலில் எந்த ஒரு உயிரிழப்பு இல்லாத வகையில்  எடப்பாடியார் சிறப்பாக கையாண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடியார் ஆணைக்கிணங்க சென்னை தலைமை கழகத்தின் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது. 

தி.மு.க.விடம் மனித நேயம் இல்லை. அதனால் தான் அ.தி.மு.க. சார்பில் மனிதநேயத்துடன் கருணை உள்ளத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இது போன்ற நிவாரண பொருட்களை நாங்கள் வழங்கி உள்ளோம்.

இன்றைக்கு முத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அரசு  ஆலோசனை கேட்பதில்லை. கடந்த சுனாமியின் போது சிறப்பாக அதிகாரிகள் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள். இன்றைக்கு தி.மு.க. அரசு முடங்கி போய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து