முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      உலகம்
Cort 2023 07-15

Source: provided

காபுல்:ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பிறகு அங்கு பெண்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட சிலருக்கு பொது இடத்தில் தலிபான்கள் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் நேற்று 2 பேருக்கு தலிபான்கள் பொது இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் கொல்லப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதையும் தலிபான்கள் வெளியிடவில்லை. தலிபான்களின் தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சாடா பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அங்குள்ள உள்ளூர் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து