Idhayam Matrimony

மார்ச் 1-ல் சென்னையில் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் : அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      தமிழகம்
ADMK

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து `தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற மார்ச் 1-ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில் (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.

தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நட்சத்திர பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, அ.தி.மு.க. ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும், தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும், தி.மு.க. அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், தலைமை கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமை கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர்கள், தலைமைக்கழக பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து