எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குமரி : சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற மலர்சந்தைகளில் மிக முக்கியமானது கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தை. இந்த மலர்சந்தைக்கு தமிழகத்தில் மதுரை, ராயக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதியிலிருந்தும் உள்ளூர் பகுதிகளுமான குமாரபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியிலிருந்தும் பூக்கள் வந்து சேரும்.
அதே போல் இங்கிருந்து கேரளாவுக்கு அதிகமாக பூக்கள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்த நிலையில் இன்று சித்திரை மாதப் பிறப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,500ஆக விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு தாழம்பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ செவ்வந்திப் பூ தற்போது மூன்று மடங்கு விலை அதிகரித்து ரூ.450-க்கு விற்பனையானது. அரளிப்பூ கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 350ஆகவும், மஞ்சள் கேந்தி ரூ.70-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |