முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூரையும் மணிப்பூராக்கி விடுவர் : அவிநாசி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
CM-1 2024-03-10

Source: provided

திருப்பூர் : பா.ஜ.க.வை மீண்டும் விட்டால் திருப்பூரை மணிப்பூராக்கி விடுவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவிநாசி பிரசாரக் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் அவிநாசியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பரப்புரை ஆற்றினார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் காலி. கோவையில் ராகுலும் நானும் நடத்திய கூட்டம் பாகுபலி போல் பிரம்மாண்டமாக இருந்தது. சமூக நீதி என்றாலே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டை தான் காலி செய்வார். வருகிற பாராளுமன்ற தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கிற போர்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசமைப்பையும் மாற்றி விடுவார்கள். மோடியின் பா.ஜ.க. வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பா.ஜ.க.வின் டி.என்.ஏ.வில் ஊறிப் போய் உள்ளது. பா.ஜ.க.வை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியை கெடுத்து விடுவார்கள். அதிகாரத் திமிரில் உள்ள பா.ஜ.க.வை மீண்டும் விட்டால் திருப்பூரை மணிப்பூராக்கி விடுவர்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதல்கள். பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதலால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்று விட்டன. சிறு, குறு, நடுத்தர தொழிலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்களுக்கான மையமாக தமிழகம் முன்னேறி வருகிறது. எளிமையாக தொழில் தொடங்கும் பட்டியலில் 11-ல் இருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து