முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      இந்தியா
Nitin-Gadkari 2024-04-19

நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். 

நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்களில் உள்பட்ட102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  இந்நிலையில், மத்திய அமைச்சரும், பா.ஜ.க. வேட்பாளருமான நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள டவுன்ஹால் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

நாட்டின் மிகப் பெரிய பண்டிகையை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். நாக்பூரில், வெப்பநிலை அதிகமாக இருப்பதால், சீக்கிரம் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நான் குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். 

கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவை கொண்டு செல்வதே எங்களது லட்சியம். இந்த தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து