முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      உலகம்
Maldives 2024-04-22

Source: provided

மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மாலத்தீவில் நேற்று முன்தினம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 284,663 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி வரைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.96 சதவீத வாக்குகள் பதிவாகின. 

ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆண்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 867 பெண்களும் வாக்களித்திருந்தனர். 93 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 368 வேட்பாளர்கள் களம் கண்டனர். அதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். 

இதில் அதிபராக இருக்கும் மொய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி 90 தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டது.

வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மொய்சுவின் பி.என்.சி கட்சி பெரும்பலாலான இடங்களில் முன்னணி வகித்தன.

மொய்சு தலைமையிலான பி.என்.சி. 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது. அதே வேளையில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் சுயேட்சையாக நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் மூன்று பெண்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். பி.என்.சி. கட்சி சார்பில் மூன்று பெண்கள் களம் நிறுத்தப்பட்டனர். அந்த மூன்று பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த 2019 தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 64 இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி பெற்றது. பி.என்.சி. - பி.பி.எம். கூட்டணி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலி, அட்டு, புவாஹ்முலாஹ் ஆகிய நகரங்களில் பி.என்.சி ஆதிக்கம் செலுத்தி அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளன. மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீனாவுடன் நட்பை மேம்படுத்த விரும்புகிறார். இந்திய ராணுவம் மலேசியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து