முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
PTR 2023 04 10

Source: provided

சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

2-ம் கட்டமாக சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல எதிர்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.  இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.  பிரதமர் மோடியின் பேச்சுக்கு பலரும் கண்டங்களை எழுப்பி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஏன் பிரதமர் மோடி மீது பாயவில்லை என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.  இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.. “ தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து