முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 சட்டசபை தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் திடீர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      சினிமா
Vishal

Source: provided

சென்னை : 2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: “வரும் 2026ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன்.  இந்த கட்சியுடன் கூட்டணி,  இந்த கட்சியுடன் இத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்க கூடாது.  மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும்.  ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம்.

கிராமப்புறங்களில் மக்களுக்கான நலதிட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. திமுக,  அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.  எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது.  மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால்,  என்னை போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.  மேலும், புதிதாக கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டோம் என்றார்.

மேலும்,  நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் விஷால் கூறியதாவது :  நடிகர் சங்க பொதுக்குழுவில் மட்டும் தான் முடிவெடுக்க முடியும்.  முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் அவர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து