முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இந்த கோடை காலத்தில், வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

போதிய மழை இல்லாமல், குழந்தைகள் போல் பார்த்து, பார்த்து, தாங்கள் பயிரிட்டு, வளர்ந்து, பலன் தர வேண்டிய நேரத்தில், மா மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் வேதனையைப் போக்க வேண்டியது அரசின் கடமை.

ஏற்கனவே, இப்பகுதி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், தற்போது வரை தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில், வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து