முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      தமிழகம்
CBCID

Source: provided

சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26-ந்தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து