முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      விளையாட்டு
Eng 2024-03-26

Source: provided

லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்றைக்குள்....

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (இன்று) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது. இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி...

அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி... 

உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதே அணி மே 22ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து