முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

புதன்கிழமை, 1 மே 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று (மே 01) விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து