முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா, இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகி விட்டது : அதிபர் ஜோ பைடன் கருத்து

வியாழக்கிழமை, 2 மே 2024      உலகம்
Joe-Biden 2024-02-17

Source: provided

நியூயார்க் : சீனா மற்றும் இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதனால்தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன். இதற்காக தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜோ பைடன் பேசியதாவது, 

சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது.

மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. 

அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு அவர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று தெரிவித்தார். 

நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் புலம்பெயர்ந்தோர்கள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஜோபைடனை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் புலம்பெயர்வு கொள்கைகளை விமர்சித்து வரும் நிலையில், ஜோ பைடன் புலம்பெயர்ந்தோர்களை ஆதரித்து பேசிவருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து