முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Neet 2023-04-13

Source: provided

புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள்  மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. 

இதன்படி, மருத்துவ படிப்புகளில் சேர ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு  23 லட்சத்து 81 ஆயிரத்து 333 -பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று(நேற்று) முதல் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். https://neet.ntaonline.in/frontend/web/admitcard/index என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து  பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து  விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.  

மேலும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பில், 

exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்.   முகப்புப் பக்கத்தில் NEET அட்மிட் கார்டு 2024 பதிவிறக்க அறிவிப்பைக் கண்டறியவும்.  இணைப்பைக் கிளிக் செய்யவும், நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும். சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.   அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும் (அது PDF வடிவத்தில் இருக்கும்) மற்றும் எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து