முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் பவுன் விலை 640 ரூபாய் அதிகரிப்பு

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைந்து பவுன் ரூ. 53,080-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை(மே.2)பவுனுக்கு ரூ.640 உயர்ந்து பவுன் ரூ. 53,080-க்கு விற்பனையானது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி வீத மாற்றம் குறித்த தகவல்கள், டாலரின் மதிப்புயா்வு உள்ளிட்டவைகளால் புதன்கிழமை இந்திய சந்தையில் தங்கம் விலை அதிரடியாக இறங்கியது. அதன்படி சென்னையில் கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(மே.2) கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளி விலையும் உயர்ந்தது வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ. 87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயர்ந்து ரூ.87,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து