முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
SUN 2023-02-28

Source: provided

சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.0 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட +7.2 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 43.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 43.1 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 டிகிரி – 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தர்மபுரி, சேலத்தில் 41.5 டிகிரி செல்சியஸ், மதுரை (நகரம் & விமான நிலையம்) மற்றும் திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல், தஞ்சாவூரில் 41.0 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ், கடலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் மற்றும் பாளையம்கோட்டையில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25 டிகிரி –30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் (+.3.5 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0 டிகிரி செல்சியஸ் (+2.9 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (03.05.2024) முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.05.2024 மற்றும் 08.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 06.05.2024 வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

வரும் 06.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை (04.05.2024) வரை: வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று (03.05.2024): வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 04.05.2024 முதல் 06.05.2024 வரை: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து