முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. வரும் 28-ம்  தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் இணைந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து