முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

Source: provided

புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் 25-ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13  தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலைவரை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சிறையில் அடைத்துள்ளதாக கூறி ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இரண்டு நிமிடங்கள் உடைய பிரச்சார பாடலை ஆம் ஆத்மி சமீபத்தில் வெளியிட்டது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி, அக்கட்சியின் பிரச்சார பாடலுக்கு தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது.

தற்போது ஆம் ஆத்மி கட்சி தலைமை பிரச்சார பாடலில் சில திருத்தங்களை செய்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து