எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதையடுத்து நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட செரியாபாணி கப்பலுக்கு மாற்றாக சிவகங்கை என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் சிவகங்கை கப்பல் அதிகாரபூர்வமாக இயக்கப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நாகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து சிவகங்கை என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை வருகிற 13-ம் தேதி(திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
160 பயணிகள் பயணிக்கும் இந்த கப்பலில் 133 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின்படி 18 சதவீத ஜி.எஸ்.டி.யுடன் ரூ.4800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணி 60 கிலோ எடை வரை உடைமைகள் எடுத்து செல்லலாம். நாகை துறைமுகத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசந்துறையை சென்றடைகிறது. மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்தை வந்தடைகிறது.
ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். கப்பலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் காலை 5.30 மணிக்குள் நாகை துறைமுகத்திற்கு வந்து விட வேண்டும். காலதாமதம் ஏற்படாதவாறு பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 4 கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 8 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்6 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது
18 May 2024திருச்சி : 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1120 கனஅடியாக அதிகரிப்பு
18 May 2024சேலம் : தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.