முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

THE PROOF இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
THE-PROOF 2024-05-06

Source: provided

Golden studios   சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம்  தி ப்ரூஃப் THE PROOF.  பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய சாய் தன்ஷிகா, ராதிகா மாஸ்டர் கதை சொன்ன போதே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். இந்தப்படம் ராதிகா மாஸ்டரின் உழைப்பிற்கு இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றார்.

பின்னர் இயக்குநர் ராதிகா பேசியதாவது… சாய் தன்ஷிகா மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர்.  படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார், என் மகன் இப்படத்துக்கு இசையமைப்பாளராகி இருக்கிறார். அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து