முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்கரன் விமர்சனம்

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Arakaran vimarcanam 2024-05

Source: provided

எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் அக்கரன் படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு நபர்களைக் கடத்தி, அவர்களை துன்புறுத்தி கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார். எம். எஸ். பாஸ்கர். அவர் கேட்கும் கேள்வி பார்வையாளர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியில் ஃபிளாஷ்பேக் காட்சி நிறைவடைந்த பிறகு அவர் கேட்ட கேள்விக்கான அர்த்தம் பார்வையாளர்களுக்கு புரிகிறது. நான் லீனியர் பாணியில் திரைக்கதையை கொடுத்திருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகளை தெரிவிக்கலாம். குறிப்பாக உச்சகட்ட காட்சியில் எம். எஸ். பாஸ்கரின் டிவிஸ்ட் இன்ட்ரஸ்டிங். 'கபாலி' விஸ்வாந்த் குணச்சித்திர கதாபாத்திரத்தில், அறிமுகமாகி கதையின் நாயகனாக உயர்கிறார்.

அவருடைய நடிப்பில் அனுபவ தேர்ச்சி தெரிகிறது.  இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை வெண்பா இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்கிறார். ஒளிப்பதிவு - பின்னணி இசை - கலை இயக்கம் -படத்தொகுப்பு- என தொழில் நுட்ப கலைஞர்கள் தங்களின் திறமையை முழுமையாக வழங்கி படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து