முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு

திங்கட்கிழமை, 6 மே 2024      உலகம்
Putin 2023 07-14

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார்.  இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்

ரஷ்யாவில் அசைக்க முடியாத அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5-வது முறையாக அவர் ரஷ்ய அதிபராகி உள்ளார். இதன் மூலம் ரஷ்ய வரலாற்றில் அதிகம் முறை அதிபராக இருந்தவர் என்கிற சாதனையை புடின் படைத்துள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற அதிபர் புடின், இன்று புதிய அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளார். அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்க உள்ளார். 

1999-ம் ஆண்டில் கடைசி நாளில் செயல் அதிபராக பதவியேற்ற புடின், 2000-ம் ஆண்டு மே 7-ம் தேதி முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்றார். 2008 வரை பதவியில் இருந்த அவர் பிறகு 2012 மே மாதம் முதல் தற்போது வரை ஒற்றை அதிபராக நீடிக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து