முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 6 மே 2024      இந்தியா
sun-2023-05-01

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில், மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரள மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்று  7-ம் தேதி வரை பல மாவட்டங்களில் தொடர்ந்து இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், கொல்லம், ஆலப்புழா, திருச்சூரில் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் கோடை மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் சற்று தணிந்தது. 

எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து