முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

திங்கட்கிழமை, 6 மே 2024      இந்தியா
Modi-2023-08-15

Source: provided

புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. அன்று நாங்கள் பா.ஜ.க.சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம் என்று பெர்காம்பூரில்  நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் 13 மற்றும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெர்காம்பூரில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது,

ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. அன்று நாங்கள் பா.ஜ.க.சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். 

ஜூன் 10-ம் தேதி பா.ஜ.க. முதல்வருடன் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஒடிசாவில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைய போகிறது. பா.ஜ.க. ஆட்சியில் ஒடிசா மாநிலத்திற்கு பட்ஜெட்டில் குறைவான பணம் ஒதுக்கியது இல்லை. 

மன்மோகன் சிங் பிரதமராக சோனியாவின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி இருந்த போது, குறைவாகதான் பணம்  ஒதுக்கி உள்ளது. இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சுகாதார வசதிகள், சுற்றுலா மேம்பாடு என பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்துள்ளது. 

பா.ஜ.க. சொல்வதை நிறைவேற்றுகிறது.பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பா.ஜ.க.வுக்கு தான். 

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவிற்கு என்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வேன். ஒடிசாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஒடிசாவில் தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளன. 

இருப்பினும், ஒடிசா மக்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்?காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிசா மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளத்தின் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தகாரர்களாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து