முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Chinnathurai 2024-05-06

Source: provided

நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், சந்திரா என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் 2 பேரும் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

பிளஸ்-2 படித்து வந்த சின்னத்துரைக்கும், நாங்குநேரியை சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னத்துரையை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் பிளஸ்-2 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை மருத்துவமனையில் இருந்தவாறு எழுதினார். பி

ன்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து