முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்

திங்கட்கிழமை, 6 மே 2024      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுனில் நரைன் அதிரடி...

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ரன்கள் அடித்தார். இதையடுத்து 236 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது;-

ஒரு பரபரப்பு நிலவி... 

"கடந்த 6 ஆட்டங்களாக டிரஸ்சிங் ரூமில் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. எங்கள் அணி வீரர்கள் என்னிடம் வந்து, நாம் தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்து வருகிறோம், என்ன நடக்கிறது? என்று கேட்கிறார்கள். டாஸ் கிடைப்பதில் தோல்வி ஏற்பட்டாலும், ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியமானது. இந்த ஆட்டத்தின் பவர்பிளேயில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. இடது-வலது பேட்ஸ்மேன் ஜோடி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடியது. ஆட்டத்தின் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நேர்மறையாக சிந்தித்து வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்த அணுகுமுறை சில சமயங்களில் வேலை செய்கிறது, சில சமயங்களில் வேலை செய்வதில்லை. இவ்வாறு ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

கே.எல்.ராகுல் பேட்டி...

லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், "எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மிகப்பெரியது. ஆனால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஒட்டுமொத்தமாக எங்கள் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. பவர்பிளேயில் சுனில் நரைன் கொடுத்த அழுத்தத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் சமாளிக்க முடியவில்லை. ஆடுகளம் மோசமாக இல்லை. பிட்ச்சில் சிறிது பவுன்ஸ் இருந்தது. எங்கள் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து