முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Amitsah 2024-05-07

Source: provided

காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் 2-வது முறையாக களம் காண்கிறார். பாராளுமன்ற மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தனர்.

அகமதாபாத்தில் வாக்களித்த பின், அமித் ஷா செய்தியாளர்களுடன் பேசுகையில், "கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் 2.5 மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலைத்தன்மை, பாதுகாப்பு, நாட்டின் வளம் மற்றும் இந்தியாவை வறுமையில் இருந்து விடுவிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த ஜனநாயக திருவிழாவில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் கடமையை ஆற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். இது நீங்கள் தேசத்தைக் கட்டமைக்க செய்யும் கடமையாகும். மீண்டும் ஊழலற்ற, சாதிபேதம் அற்ற, வாரிசு அரசியல் இல்லாத ஆட்சி அமைய வாக்களியுங்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் கொண்ட ஆட்சியை தேர்ந்தெடுங்கள்.நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களுக்கான வளத்தைக் கொண்டு வருவதோடு தேசத்துக்கும் இனி வருங்காலங்களில் நன்மை சேர்க்கும்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக காந்திநகரில் உள்ள ஒரு குடியிருப்புக்குச் சென்ற அமித் ஷா அங்கிருந்த மக்களிடம் பேசி, வாக்களிக்க ஊக்குவித்தார். மக்கள் அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 10 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 10 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 10 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து